விசிஷ்டாத்வைதம்


யதீந்திர மத  தீபிகை


எழுதியவர் :  திருப்தியில் வாழ்த்த ஸ்ரீநிவாசாசார்யர்
                               
(ஸ்ரீநிவாசாசார்யர் கனவில் தொட்டையாச்சார்யர் தோன்றி யதீந்திர மத  தீபிகை என்ற எளியோரும் புரிந்துகொள்ளும் நூலை எழுதுமாறு கூறினார்)

யார் இந்த தொட்டையாச்சார்யர்?

ஸ்ரீ ராமானுஜரின் பிரதான சீடர்களில் ஒருவரான முதலியாண்டான்
வம்சாவழியில் வந்த கோயில்கந்தாடை அண்ணன் போல்வோரின் வம்சத்தில் வழியில் பிறந்த , நரஷிம்ஹா பெருமானின் பெரும் பக்தர் ஸ்ரீநிவாச மஹா குரு /மகாசார்யர்/தொட்டையாச்சார்யர் என்பவர். 

தொட்டையாச்சார்யர் ஆற்றிய பணிகள்.
  1. வேதாந்த தேசிகரின் சத தூசனி என்ற நூலுக்கு சண்டமருதம் என்ற  உரையை எழுதியவர்.
  2. பஞ்ச மஹா விஜயம் என்ற நூலையும் எழுதினர். 
  3. அப்பைய தீட்சிதர் வாத போரில் வென்றவர். 
  4. சிதம்பரத்தில் கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியை அமைத்தவர்.
  5. சோழ நரசிம்மபுரம் கோவிலை (சோளிங்கர்) ஸ்தாபித்தவர் .
எது உயர்த்த அறிவு?

ஆத்திகர்களின் அறிவு அடிப்படையில் வேதத்தை அதிகார தோற்றுவாய் என கொண்டிருக்கும். அந்த அறிவு கீழ்வரும் செயல்களினால் நமக்கு விளங்கும்:


நியாயம்              =  தர்க்கத்தின் அடிப்படையில்

வைஷேக்ஷிக  =  இயற்கை தத்துவம் அடிப்படையில்

சம்க்ஹ்ய          =   எண்களின்  கோட்பாடுகள் அடிப்படையில்  

யோகா                = உடல் இயல் அடிப்படையில்  

மீம்மாம்சா      =  வேதத்தின் விளக்குரைகள்/விசாரங்கள்    
                                      அடிப்படையில்  (பூர்வ மீமாம்ஸா)

வேதாந்தம்      =  வேதத்தின் இறுதி கொள்கை (உத்தர  மீமாம்ஸா /                                              உபநிடதம் அடிப்படை கொள்கைகள்)


கீழ் காணும் படம் பல்வேறு வகையான குருமார்களை காட்டும்






மீம்மாம்சா     = உயர்ந்த விஷயம் பற்றி விவாதம் பண்ணுவது



அவ்வகையில் எது உயர்ந்த  விஷயம் = வேதம் பற்றிய ஆராய்ந்து விவாதம் செய்வதே மிக உயர்ந்த விஷயம்

















Latest
Previous
Next Post »
0 Komentar